இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் வீட்டில் முகாமிட்டு கூட்டு எதிரணி மந்திராலோசனை

அமைச்சர் றிஷாட் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

நாளைய தினமும் கையொப்பம் திரட்டப்படவுள்ளது. அதன்பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

குறித்த பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பில் கூடினர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.

நாளை காலையும் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றும், அதன்பின்னரே அது கையளிக்கப்படும் என்றும் கூட்டு எதிரணி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பஸில் ராஜபக்ச தரப்பு இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை என்று கூட்டுஎதிரணி வட்டாரங்களிலிருந்த அறியமுடிகின்றது.

 

கருத்து தெரிவிக்க