வடமேல் மாகாணத்தில் இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது இராணுவ வீரர் ஒருவர், வன்முறையாளர்களுக்கு உதவினார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் இராணுவம் இதனை அறிவித்துள்ளது.
குருநாகல் தும்மோதர என்ற இடத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைகளின்போது இராணுவச்சீருடையுடன் ஒருவர் வன்முறையாளர்களுக்கு உதவும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் இது தொடர்பில் இராணுவம் கருத்துக்களை வெளியிடவில்லை.
எனினும் பல்வேறு இடங்களில் இருந்து நெருக்குதல்கள் தொடுக்கப்பட்டநிலையில். தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டு நடவடிக்கைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே தெரிவித்துள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டை நம்பமுடியவில்லை. எனினும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக லியனகே கூறியுள்ளார்.
விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி தண்டிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணொளியில் காண்பிக்கப்படும் இராணுவச்சீருடையுடன் இருப்பவரை அடையாளம் காணுமாறு பொதுமக்களிடம் இராணுவம் கோரியுள்ளது.
இந்தநிலையில் தகவல்கள் இருப்பின் 0112514280 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் இராணுவம் பொதுமக்களிடம் கேட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க