இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை!

வடமேல் மாகாணத்திலும், கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 4 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு இன்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.

வடமேல் மாகாணத்திலும், மினுவாங்கொடையிலும் தலைதூக்கிய வன்முறைகளையடுத்து, பதற்றத்தை தணிப்பதற்காகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதேவேளை, வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 60 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஊரடங்குச்சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 

 

கருத்து தெரிவிக்க