உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கைக்குள் இதுவரையில் 143,622 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையில் 2024 ஓகஸ்ட் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரையில் இந்தியாவில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 27,999 ஆகவும், இங்கிலாந்தில் இருந்து 15,918 சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் இருந்து 10,068 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 9,162 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க