கடந்த ஏப்ரல் மாதம் பிரேசிலில் எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கில் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுத்ததன் காரணமாக பிரேசிலில் எக்ஸ் வலைத்தளத்தை தற்காலிகமாக தடைசெய்துள்ளதாக பிரேசில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்தோடு நீதிமன்ற உத்தரவுகளுக்கமைய நிலுவையிலுள்ள அபராத தொகையை செலுத்தும் வரை எக்ஸ் வலைத்தளத்திற்கான தடை உத்தரவு நீடிக்குமெனவும் அடுத்த 24 மணித்தியாலத்தில் எக்ஸ் வலைத்தளத்திற்கு சட்ட விவகார பிரதிநிதியொருவரை நியமனம் செய்யவேண்டுமெனவும் பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க