செய்தித் துளிகள்
பயங்கரவாத விசாரணைப் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி கால்துறை மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பதில் காவல்துமறைமா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் ஆலோசனையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விபத்தில் ஒருவர் பலி
ஹபரண – ஹொரிவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்
குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகருக்கு இடமாற்றம்
குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களையடுத்து, குளியாப்பிட்டிய காவல்துறை அத்தியட்சகர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பிரதி பணிப்பாளராக அவர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.
நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குளியாப்பிட்டிய பிரிவு பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நா. கண்டனம்
“இனவாத ஆயுத மோதலின் அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சித்துவரும் இலங்கையை, தற்போதைய தாக்குதல்கள் மீண்டும் பின்னோக்கி நகர்த்தி வருகின்றது.”
– இவ்வாறு இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. சிறப்பு ஆலோசகர் கறென் ஸ்மித் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இலங்கையின் அண்மைக்கால வன்முறைகள் ஆசிய பிராந்தியத்தில் தேசியவாத மற்றும் தீவிரவாத கருத்துக்களை அதிகரிக்க செய்துள்ளதுடன், மத சிறுபான்மையினரை ஆபத்தில் தள்ளியுள்ளது.
இந்தநிலையில், இந்த வெறுக்கத்தக்க தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் பொருத்தமான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு, எதிர்க்கட்சி, சிவில் சமூகம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
இனவாத ஆயுத மோதலை நோக்கி இலங்கை நகர்ந்து வருகின்றது. இது நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும். எனவே, இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நிலைமை மோசமடையும் சாத்தியம் காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவ்விடயத்தில் இலங்கை அரசின் துரித நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்தநிலையில், இனங்களுக்கிடையே சமாதானத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு அரசுக்கு ஐ.நா. ஆதரவு வழங்கும்.
நாட்டின் அரசமைப்பில் அங்கீகரிக்கப்பட்டதற்கமைய தமது மதத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தினருக்கும் உரிமை உண்டு. அதற்கமைய இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஹொரோயினுடன் ஒருவர் கைது
50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மட்டக்குளிய ஸமிதபுர பிரதேசத்தில் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க