இதழ்கள்உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பயங்கரவாதத்தை ஒழிக்க அணிதிரள்வோம் – உலக நாடுகளுக்கு மைத்திரி அழைப்பு

மத தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன அறைகூவல் விடுத்தார்.

சீனாவின் பீஜிங் நகரில் இன்று (15) முற்பகல் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த அறைகூவலை விடுத்தார்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் தலைமையில் இன்று முற்பகல் பீஜிங் நகரில் ஆரம்பமானதுடன், அம்மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன கலந்துகொண்டார்.

47 நாடுகளின் அரச தலைவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் மனித இனத்தின் இருப்புக்காக உலக மக்கள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் ஆசிய நாகரிகங்கள் பற்றிய விரிவாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுதல் இந்த மாநாட்டின் நோக்கமாகும். இம்மாநாடு மே 22ஆம் திகதி வரை பிஜிங் நகரில் நடைபெறும்.

 

கருத்து தெரிவிக்க