எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது செய்தி அறிக்கையிடல்,அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான ஊடக வழிகாட்டுதல்கள் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அத்தோடு ஊடக வழிகாட்டுதல்களை அமுல்படுத்துவதற்கும் பரிந்துரை வழங்குவதற்கும் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இணைய தளங்கள், சமூக ஊடக இணையதள நிர்வாகிகள்,மின்னணு ஊடக நிறுவனங்கள், அச்சு ஊடகங்கள் என்பவற்றுக்கு தனிதனியாக ஊடக வழிகாட்டுதல்கள் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க