இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில், சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 35 ரூபாயால் குறைக்கப்பட்டு 240 ரூபாயாகவும்,ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயம் 20 ரூபாயால் குறைப்பட்டு 265 ரூபாயாகவும்,ஒரு கிலோ வெள்ளை சீனி 4 ரூபாயால் குறைக்கப்பட்டு 254 ரூபாயாகவும், ஒரு கிலோ கீரி சம்பா 6 ரூபாயால் குறைக்கப்பட்டு 254 ரூபாயாகவும்,ஒரு கிலோ சிவப்பு சீனி 5 ரூபாயால் குறைக்கப்பட்டு 370 ரூபாயாகவும்,ஒரு கிலோ பருப்பு 5 ரூபாயால் குறைப்பட்டு 285 ரூபாயாகவும்,ஒரு கிலோ சிவப்பு கெளபி 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 940 ரூபாயாகவும் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க