இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் உருவாகி வரும் சூழ்நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் கருத்து

நேற்று (ஓகஸ்ட் 01) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சரும் ஜனாதிபதி சட்டதரணியுமான அலி சப்ரி மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இஸ்ரேலிய நெருக்கடியுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு நெருக்கடி நிலை அதிகரிக்கும் பட்சத்தில் அந்த பிராந்தியத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்களை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க