இந்தியாவில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்துவதற்காகவே அங்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை மேலும் நீடிக்கப்பட்டதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய உள்துறை அமைச்சு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீடிப்பதாக அறிவித்துள்ள நிலையில். அது தொடர்பில் சென்னையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி, சரஸ்வதி ராஜேந்திரன், தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
இதன்போது விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடைக்குறித்து அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுக்கூரும் வகையில்.மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு தொடர்பிலும் அவர் அறிவித்தலை விடுத்தார்.
இதேவேளை இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வாளர் கேனல் ஆர் ஹரிகரன், தமது கருத்தில் தமிழகத்தில் சீமானின் நாம் தமிழர் அமைப்பு, மே 18 அமைப்பு உட்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த ஐந்தாண்டு தடை நீடிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் 2009ஆம் போருக்கு பின்னர், சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அமைதி நிலையில் செயற்படுகிறார்கள் என்ற ஒரு அச்சத்தின்கீழும் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஹரிகரனின் கருத்துக்கு ஒத்த தமிழக ஆய்வாளர் டி என் கோபாலனும் வெளியிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான பாதுகாப்பு ஆய்வாளர் ரொஹான் குணவர்த்தன தமது கருத்தில், இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்கள் பல்வேறு நாடுகளிலும் விரைந்து செயற்படுகின்றனர் என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தியா தொடர்ந்தும் அவர்கள் மீதான தடையை நீடிக்கவேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
எனினும் இந்தக்கருத்துக்களை மறுத்துள்ள பழ நெடுமாறன், இந்தியாவில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லை. எனவே இந்திய அரசாங்கத்துக்கு தமிழக அமைப்புக்களை கட்டுப்படு;த்த அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
மாறாக இலங்கையிலேயே தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். குறிப்பாக இலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வரமுடியாது என்ற நிலைப்பாடு தொடர்வதாக நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க