இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட் இரத்த புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜூலை 31) சிகிச்சை பலனின்றி தனது 71வது வயதில் காலமானார்.
அன்ஷூமான் கெய்க்வாட் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளதோடு இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும் 15 ஒருநாள் போட்டிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது இவரது மறைவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா,பிரதமர் நரேந்திர மோடி என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க