புதியவைவிளையாட்டு செய்திகள்

இரண்டாவது டி20 தொடரில் இந்தியா வெற்றி!

கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது. துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.2 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.

கருத்து தெரிவிக்க