புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு புதிய சங்கத்தலைவர் நியமனம்

கடந்த மாதம் 10ம் திகதி நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்ற மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து நேற்று (ஜூலை 23) மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது.

இத்தேர்தலில் அஜிங்யா நாயக் மற்றும் சஞ்சய் நாயக் ஆகியோர் போட்டியிட்டனர்.அதில் 221-114 என்ற வாக்கு வித்தியாசத்தில் சஞ்சய் நாயக்கை வீழ்த்தி அஜிங்யா நாயக் வெற்றி பெற்றார்.

அதற்கிணங்க மும்பை கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக அஜிங்யா நாயக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க