நேற்று (ஜூலை 16) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக கஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்தார்.
அதற்கிணங்க அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக குறைக்க முடியுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேலும் மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் இருப்பினும் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கருத்து தெரிவிக்க