இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

நேற்று (ஏப்ரல் 23) புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் 20 லீற்றர் கசிப்பு, 330 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க