மாதம்பேயில் சட்டவிரோதமாக சிலிக்கா மணல் அகழ்வினால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவைத் தடுக்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் நவம்பர் 11ம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கிணங்க இன்று (ஜூலை 16) எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு அழைக்கப்பட்டனர்.
மேலும் மாதம்பே பகுதியிலுள்ள ஒன்பது கிராம சேவைப்பிரிவுகளில் சுமார் 200 ஏக்கரில் சிலிக்கா மணல் அகழ்வு நடைபெறுவதாகவும் இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சுற்றிக்காட்டியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க