முதலாம் வகுப்பு முதல் 11 வகுப்பு வரை உள்ள நாட்டின் 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் புலமைப்பரிசில் உதவித்தொகை இன்று (ஜூலை 12) முதல் மாவட்டமட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களுக்கும் இந்நடவடிக்கை விரிவுபடுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று (ஜூலை 12) வழங்கப்படவுள்ளதோடு நாளை (ஜூலை 13) பதுளை,மாத்தளை,யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபாய் வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்பட இருப்பதோடு ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்களைத் தெரிவு செய்து 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாணவர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுடன் 30,000 ரூபாய் உதவித்தொகை புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் வழங்குவதற்கும், அடுத்த மாதம் முதல் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் வரை மாதம் 6000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க