கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தான்,ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள்,ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து இணையதளத்தில் வெளியிட்ட குற்றசாட்டில் விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதையடுத்து 2022ம் ஆண்டு ஜீன் மாதம் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து ஜூலியன் அசாஞ்சே நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
அவ்வழக்கு விசாரணை இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் இன்று (ஜூன் 25) ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க