சினிமாபுதியவை

சூர்யாவுடன் இணைந்த ரசவாதி பட நடிகர்!

நடிகர் சூர்யாவின் சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 2ம் திகதி அந்தமானில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிது. இந்தப் படத்தில் அவருடன் ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் சூழலில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

அதனை தொடர்ந்து இந்த படத்தில் ரசவாதி பட நடிகரான சுஜித், அந்தமான் ஷூட்டிங்கில் சூர்யாவுடன் இணைந்த காம்பினேஷன் காட்சிகளில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காம்பினேஷனில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க