புதியவைவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

இன்று (20) காலை நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றது.

181 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது வெற்றி பெற்றது.

கருத்து தெரிவிக்க