சவூதி அரேபியாவிலுள்ள மக்கா நகரில் ஹஜ் யாத்திரைக்கு சென்ற 14 யாத்ரீகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கா வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இவ்வுயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதில் உயிரிழந்த 14 பேரும் ஜோர்தான் நாட்டவர்கள் எனவும் மேலும் 17 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
அத்தோடு கடும் வெப்பம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 2700 ஹஜ் யாத்திரீகர்கள் பாதிப்படைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க