இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு

நேற்று (ஜூன் 14) ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 45 முதல் 50 வயதுக்குட்பட்ட இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் ஊர்காவற்றுறை மடத்தவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதனால் சடலம் யாழ்ப்பாண பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க