குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 4 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணிவரை மேற்படி பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதிகாலையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலேயே தற்போது மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிலையங்கள் மீது நேற்று மாலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, இந்தப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி, நேற்றிரவு பெருமளவிலானோர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க