உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

ஜனாதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் முறைப்பாடு

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு (12) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

” நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் பின்னர் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் குறிவைக்கும் வகையில் சில சக்திகள் செயற் படுகின்றன.

கடந்த காலங்களில் திகன, கண்டி, அம்பாரை, உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததாலே என்னையும் இவர்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.

சமூகத்திற்கு எதிரான அநீதிகளைத் தட்டிக் கேட்கும் பொறுப்புக்களிலிருந்து என்னால் விலகிச் செயற்படமுடியாது. அதே போல எமது தாய்நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எந்தச் சக்திகளையும் பூண்டோடு அழிப்பதற்கு எனது முஸ்லிம் சமூகம் தாயாரகவுள்ளது. ” என்றார்.

 

கருத்து தெரிவிக்க