இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் நவநீதம்பிள்ளை தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸா பெண்களை பாலியல் சித்திரவதை செய்ததோடு பலஸ்தீனிய ஆண்கள் மற்றும் இளைஞர்களை பாலின ரீதியாக துன்புறுத்தியதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடல் உறுப்புகளை துண்டித்தல், தலைகளை துண்டித்தல், நிர்வாணப்படுத்துதல் மற்றும் இறந்தோரின் உடல்களுக்கு அவமரியாதை செய்தல், எரித்தல் போன்ற செயல்களில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டதாக
தெரிவித்துள்ளது.
அத்தோடு சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காது அவற்றை மீறி நடப்பது குற்றச்செயலாகுமென ஐ.நா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க