இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் இந்திய நிதியமைச்சருக்குமிடையே சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்னவிற்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் இந்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன வாழ்த்து தெரிவித்துள்ளதோடு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க