நேற்று (ஜூன் 12) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதன்படி அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் மூலம் அரசாங்கத்தின் அன்றாட செயற்பாடுகளுடன் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும போன்ற நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் கடன்களுக்கான வட்டி என்பவற்றைச் செலுத்த வேண்டும் எனவும் அதற்காக 2023ஆம் ஆண்டில் மட்டும் 4.3 டிரில்லியன் செலவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க