சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று நேற்று (ஜூன் 12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் இச்சந்திப்பின் போது இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் தொடர்பான வேலைத்திட்டம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அத்தோடு இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க