கனடாவின் ரொரன்றோ மாகாணத்தில், invasive meningococcal disease (IMD) என்னும் நோய் அதிகரித்துவருவாதாகவும் 13 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்ததாகவும் ரொரன்றோ மாகாணத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த தொற்று, Neisseria meningitidis என்னும் பாக்டீரியாவால் பரவும் நோய்த்தொற்றாகும். எச்சில் மூலமும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமும் இந்நோய் பரவும் என தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், உரிய நேரத்தில் ஆன்டிபயாட்டிக் சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்த நோய்த்தொற்றை குணமாக்கவும் முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க