நேற்று (ஜூன் 06) உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டத்தில் 44,430 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் 38,144 உந்துருளிகளும் 6,286 மகிழுந்துகளும் உள்ளடங்கியுள்ளன என தெரிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க