நேற்று (ஜூன் 06) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட விசேட வைத்திய கலாநிதி சுதத் சமரவீர டெங்கு தொற்று குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து சுதத் சமரவீர கருத்து தெரிவிக்கையில் கடந்த ஐந்து மாதங்களில் 25000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு 09 பேர் டெங்கு காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
அத்தோடு தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக டெங்கு நோயானது தொற்றுநோய் மட்டத்திற்கு அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையால் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமென சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க