உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

விமான சாகசத்தில் விபரீதம்

போர்த்துக்கல் விமானப்படையின் 72வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 02) தெற்கு போர்த்துக்கலின் 11வது வான்ப்படைப்பிரிவினரால் விமான சாகசமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது சாகசத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிய ரக இராணுவ விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாயின.
இதில் விமானி ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடருமாறு போர்த்துக்கல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நுனோ மெலோ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க