இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தர பரீட்சையில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (மே 31) பிற்பகல் வௌியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் பெறுபேறுகளுக்கு அமைய ஒவ்வொரு பாடப் பிரிவின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த பஹன்மா உபனி லெனோரா பெற்றுள்ளார்.

பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு ஆனந்தா கல்லூரியை சேர்ந்த W.A சிராத் நிரோத முதலிடத்தை பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் காலி ரிச்மண்ட் வித்தியாலயத்தை சேர்ந்த தசுன் ரித்மிக விதானகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில், கினிகத்தேன மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த முல்வில ரலலாகே ஷெஹானி நவோத்யா முல்விலகே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

பாணந்துறை மகளிர் கல்லூரி மாணவி ஷெஹாரா சிதுமினி புஞ்சிஹேவா வணிகவியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
உயிர் முறைமைகள் தொழிநுட்பம் பிரிவில் முதலாம் இடத்தை எஹலியகொட மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருலு சிஹில்திய பல்லியகுரு என்ற மாணவர் பிடித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க