நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார மாற்றச்சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சுனில் ஹந்துன்நெத்தி தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மிகவும் கீழ்த்தரமான வகையில்
செயற்படுவதாகவும் பாரதூரமான சட்டமூலமொன்றை முன்வைத்துள்ளதாகவும் அந்த சட்டமூலத்தில் முதலீட்டுச் சபையை
இல்லாதொழிப்பதற்கான சரத்து உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வணிகர் சங்கங்களிடமோ, தொழிலதிபர்கள் சங்கங்களிடமிருந்தோ அல்லது தனியார் துறையில் உள்ள எவரிடமிருந்தோ கோரிக்கை வராத நிலையில் அரசாங்கத்திற்கு தனது லட்சியம் என்ன என்பதை தெளிவுபடுத்துவதாகவும் இதன்போது சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க