சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த உமர் பின் ஓம்ரான் அவரது பக்கத்து வீட்டின் பாதாள அறையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் 1990களில் ஏற்பட்ட அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது அந்நாட்டிலுள்ள ஜெல்ஃபாவில் காணாமல் போயிருந்தார் எனவும்
தற்போது, 45 வயதான
உமர் பின் ஓம்ரான் தான் வளர்ந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஓம்ரானை அடைத்து வைத்ததாக சந்தேகிக்கப்படும் 61 வயது மதிக்கதக்க நபர் ஒருவரை அல்ஜீரி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க