கடந்த காலத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை அழிக்க அரசாங்கம் பெருமளவு பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், போதைப்பொருட்களை அழிக்க நிரந்தர இடம் இல்லாததால் பல சிரமங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, நிரந்தரத் தீர்வாக, லாக்டோஸ் தோட்டக் காணியில் 20 பேர்ச்சஸ் பரப்பளவில் போதைப்பொருட்களை அழிக்கும் உயர் மின் உலை ஒன்று புத்தளம் வனாத்தவில்லுவ பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது.
மேலும் இந்த அடுப்பு பொது பாதுகாப்பு அமைச்சரின் நெறிப்படுத்தலின் கீழ் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் 11 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் நிறுவப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த அடுப்பில் முதல் கையிருப்பு போதைப்பொருள் அழிக்கும் பணி நாளை (18) மாலை 5 மணியளவில் அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தலைமையில் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க