இந்தியா

பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை!

தேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அங்கமாக கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. கடந்த 18ம் தேதி முதல் அமலில் இருந்து வரும் 4ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஏற்கனவே மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.

ஊரடங்கை நாளையுடன் நிறைவு செய்வதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்தும், அப்படி நீட்டிக்கும்பட்சத்தில் கூடுதல் தளர்வுகளை எந்தெந்த விதங்களில் வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நாடெங்கிலும் ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தெரிவித்துள்ளார். மத்திய உளவுத்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் கோவா முதல்வர் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கருத்து தெரிவிக்க