உலகம்

உலக சுகாதார அமைப்பு தொடர்பாக ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு !

உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா முடிவிற்கு கொண்டு வருவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் ட்ரம்பின் இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்றும், உலக சுகாதாரத்திற்கு பின்னடைவு என்றும், ஜேர்மன் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார். மேலும் இது சர்வதேச சுகாதாரத்திற்கு ஏமாற்றம் அளிக்கும் பின்னடைவு என்பதோடு, எதிர்காலத்தில் உலக சுகாதார அமைப்பு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த அதற்கு சீர்திருத்தம் தேவை.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும். மேலும் நிதி ரீதியாகவும் ஈடுபட வேண்டும். இது நமது ஐரோப்பிய ஒன்றிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் எனவும் ஜேர்மன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க