இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சிறுமியின் இறுதி பயணம்

நேற்று (மே 13)
மக்கோன், முங்கேன பிரதேசத்தில் முன்பள்ளி செல்லும் மூன்றரை வயது சிறுமி ஹிஹாகி நெடாஷா மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த சம்பவம் ஹிஹாகி நெடாஷா வீட்டின் அறையில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த கையடக்கத்
தொலைபேசியை
பார்த்துகொண்டிருந்த வேளை நிகழ்ந்துள்ளது.
சிறுமி திடீரென்று தரையில் மயங்கி கிடந்ததை பார்த்த சிறுமியின் தந்தை பேருவளை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

வைத்தியர்கள் கடுமையாக போராடியும் சிறுமி சுயநினைவினை இழந்துள்ளதாகவும் ;
ஏற்கனவே சிறுமி இறந்து விட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி,பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாதுகாப்பற்ற மின்சாரத்தை தொட்டமையே இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க