“நெகிழிகளை நிர்வகிப்பது,
இயற்கையை பாதுகாப்பது” எனும் தொனிப்பொருளில்
மே மாதம் 21ம் திகதி முதல் 27ம் திகதி வரை மலைநாட்டில் Lumala Eco Ride 2.0 முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வின் போது நிலைபேறாண்மை , e போக்குவரத்து மற்றும் கழிவு முகாமைத்துவம் செயற்பாடு குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.
மேலும் இதில்
சூழல்சார் நிறுவனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,
கழகங்கள் மற்றும் சம்மேளனங்களின் அங்கத்தவர்கள்,
மாநகர சபைகள், அமைச்சுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், சைக்கிளோட்ட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
அத்தோடு இந்நிகழ்வு பாணந்துறை முதல் பெல்மடுல்ல ஊடாக ஹப்புதளை வரை முன்னெடுக்கப்பட்டு, ஹோர்ட்டன் சமவெளியினூடாக நுவரெலியாவுக்கு பயணிக்கும். பின்னர் நுவரெலியாவிலிருந்து கண்டி, கேகாலை ஊடாக கொழும்புக்கு திரும்பும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க