ரஷ்ய ஜனாதிபதியினால் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்.2012ம் ஆண்டு முதல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய 68 வயதான செர்ஜி ஷோய்குவை நீக்கிவிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 65 வயதான ஆண்ட்ரி பெலோசோவ் என்பவரை புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளார்.
மேலும் 65 வயதான ஆண்ட்ரி பெலோசோவ் ரஷ்யாவின் முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் பொருளாதார நிபுணரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட செர்ஜி ஷோய்குவை ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய உறுப்பினராக நியமிக்கவும் ரஷ்ய ஜனாதிபதி புதின் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க