இலங்கைஉள்நாட்டு செய்திகள்புதியவைவணிக செய்திகள்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு தொடர்பில் நிதியமைச்சின் புதிய நடவடிக்கை

நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய,
நாட்டில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு மற்றும் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பான பகுப்பாய்வு குறித்து ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,இதற்காக வருடத்திற்கு சுமார் 80 பில்லியன் தேவைப்படுகின்றதாகவும்,இதற்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த பணத்திற்காக திரைசேரியிலிருந்து 105 பில்லியன் ரூபாவினை கடனாக பெற்றுள்ளதையும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு நடவடிக்கை தொடர்பாக ஜனாதிபதி மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு வருவதாகவும் வெவ்வேறு வயது பிரிவில் இருக்கின்றவர்களின் வட்டி விகிதம் தொடர்பாக கிடைக்கப்பெறும் கோரிக்கைகளை முறையாக ஆராயவுள்ளளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க