டயானா கமகேவின் வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் அமர சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்க கோரி மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தனது எம்.பி பதவியை கடந்த புதன் கிழமை (08) அன்று இழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
கருத்து தெரிவிக்க