இந்துக்களால் கொண்டாடப்படும் புனித நாளான அட்சய திருதியை நாள்,இந்த ஆண்டு (2024.05.10) அதிகாலை 4.17 மணி முதல் மே 11 ஆம் திகதி மதியம் 2.50 மணி வரை உள்ளது.ஆனால்,இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 5.45 முதல் மதியம் 12.06 வரையான காலப்பகுதி நல்ல நேரமாகும் என கூறப்படுகிறது.
மேலும்,அட்சய திருதியை அன்று பொருட்கள் வாங்குவது,ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை நமக்கு பெற்று தரும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற அணிகலன்கள் தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிற்கு தேவையான திரைச்சீலைகள் தொடங்கி ஏதேனும் உபயோகப் பொருட்கள், வாகனங்கள், ஆடைகள் என பொருட்களையும் வாங்கலாம்.
கருத்து தெரிவிக்க