அழகு / ஆரோக்கியம்புதியவை

மருந்தாகும் சின்ன வெங்காயம்.

சாம்பாருக்கு பயன்படும் சின்ன வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் நம்மை வியக்க வைக்கிறது. ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டதும் சுடு தண்ணீரை குடித்தால் ஜலதோசத்துடன் தும்மலும் நின்றுவிடும். வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி, அதை நல்லெண்ணெய்யில் வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும். முடி கொட்டுதல் பொடுகு போன்றவைக்கும் நல்ல தீர்வை தருகிறது.

தினசரி பச்சை வெங்காயத்தை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. மேலும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா பிரச்சனைகள் வராமல் காக்கிறது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்தால் ரத்த சோகையை தவிர்க்கலாம்.

கருத்து தெரிவிக்க