இன்று (23.03) மாலை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் அதில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து தெரிவிக்க