ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரம்மாண்ட இசைக்கச்சேரி அரங்கிற்குள் (Crocus City Hall) வெள்ளிக்கிழமை இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
இதன்போது, அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். மேலும் அரங்கிற்குள் வெடிகுண்டுகளையும் வீசியதால், அந்த பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த தாக்குதலில் தற்போது வரை 93 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 145-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு IS அமைப்பு உரிமை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதுடன்
இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயல் என ரஷ்ய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க