இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலைமை நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல், இரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15.03) கடும் வெப்பமான வானிலை காணப்பட்டது.
கடும் வெப்பமான வானிலையுடன் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சூரிய ஒளி நேரடியாக தோலின் மீது படுவதால் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும், இதன்போது தோலில் எரிகாயங்கள் ஏற்படலாம்.
தோலில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது, தோல் அரிப்பு, வியர்வையால் சீழ் கொப்புளங்கள், வியர்வை தேங்கி மார்பகங்களில் உருண்டை வடிவ பூஞ்சை போன்றவை இந்த தொற்று நிலைகளாக அடையாளம் காணப்படுகின்றன.
கருத்து தெரிவிக்க