நாட்டின் பல பகுதிகளில், வடமேல்,மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் இன்று (28.02) வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பது, வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் துணை இயக்குநர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதனுடன் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். வியர்வையுடன் உப்பும் தண்ணீரும் உடலை விட்டு வெளியேறும். இதன் காரணமாக வாந்தி, தலைவலி, உடல் வலி, , பசியின்மை, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும். இவற்றைத் தடுக்க தண்ணீர் மற்றும் நீர் அகாரங்களை அதிகம் அருந்த வேண்டும். இயற்கை பானங்களான கஞ்சி வகைகள், தேசிக்காய், தோடம்பழம், இளநீர், தேங்காய் நீர் போன்றவை சிறந்ததாகும்.
இந்நிலைமை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் அபாயம் காணப்படுவதாக வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க